May 11, 2022

Read this article in English | සිංහල | தமிழ்

மே 09, 2022 அன்று என்ன நடந்தது என்பதை படங்கள், காணொளிகள் மற்றும் வரைபடங்களை பயன்படுத்தி விளக்கும் தொகுப்பு.

GGGcover.jpg

ஆய்வு : யுதஞ்சய விஜேரத்ன மற்றும் நிசால் பெரியப்பெரும மொழிபெயர்ப்பு : மொகமட் பைரூஸ் Watchdog அணியினதும் #AttackOnGGG மூலம் எமது வாசகர்களினதும் முழுமையான பங்களிப்புடன்

கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள்

இது இரண்டு பாகங்களைக் கொண்ட கட்டுரையின் முதலாம் பகுதி. முதல் பாகம் மே 09, 2022 அன்று கோட்டா கோ கம மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட வழிவகுத்த விடயங்களை ஆராயும் அதே வேளை இரண்டாம் பாகம் அத்தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக நிகழ்ந்த நிகழ்வுகளை ஆராயவுள்ளது.

நாம் நேரங்களை துல்லியமாக குறிப்பிடாதவிடத்து, இங்கு குறிப்பிடப்படும் நேரங்கள் பருமட்டானவை (5 நிமிடங்கள் முந்தியதாக அல்லது பிந்தியதாக அமைகின்றன).

சிவப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் இன்றைய நிகழ்வுகளின் நேரடி அடைவான எமது ஆவணத் தொகுதி திட்டத்தில் தோன்றவுள்ளவர்கள். அது தயாரானவுடன், இந்த வரி வடிவம் மற்றும் சிவப்பு எழுத்தில் உள்ள பெயர்கள் என்பன ஒவ்வொரு ஆவணத்திலும் இணைப்புகளுடன் புதுப்பிக்கப்படும்.

பெயர்கள் தொடர்பில்: ஒவ்வொருவரதும் அந்தரங்க உரிமை நாம் நம்பிக்கை கொள்ளும் விடயமாக அமைகின்றது. மேலும், எவராவது பகிரங்கமாக இன்னொருவரை தாக்கும் வேளை, அல்லது அரச அலுவலராக இருந்து கொண்டு இலங்கை பிரஜைகளின் உரிமையை (அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் உரிமை போன்ற) மீறும் சமயம் அந்நபர்களின் அந்தரத்துக்கான உரிமை அவ்விடத்தில் முடிவடைகின்றது எனவும் நாம் நம்புகின்றோம். முட்டாள்தனமான விளையாட்டுக்களில் ஈடுபடுவோர் முட்டாள்தனமான பரிசுகளையே எதிர்பார்க்க முடியும்.

ஆரம்பிப்போம். ஒவ்வொரு பிரிவையும் நோக்க அப்பிரிவின் கீழுள்ள அம்புக்குறியை சொடுக்கவும்.

காலை 10:00 மணிக்கு முன்னர்: அலரி மாளிகையின் பின்புறத்தில் மஹிந்தவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம்

காலை 10:00 மணிக்கு பின்னர்: அலரி மாளிகையில் சமருக்கான அழைப்பு

நண்பகல் 12:00 மணிக்கு சற்று பின்னர்: மைனாகோகம மீதான தாக்குதல்

பிற்பகல் 12:30 இற்கு சற்று பின்னர்: காலி முகத்திடல் சுற்று வட்டத்தைநோக்கிய பேரணி

பிற்பகல் 12:43 இற்கு சற்று பின்னர்: பொலிசார் கலகக்காரர்களை காலி முகத் திடலுக்கு செல்ல அனுமதிக்கின்றனர்

கோட்டாகோகம மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்

முடிவுரையாக

<aside> 📎 இந்த ஆக்கத்திற்கான காணொளிகளை பதிவு செய்த மற்றும் பங்களிப்புச் செய்த அனைவருக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் : NewsFirst, Derana, NewsWire, EconomyNext (உங்களது கமரா மூலமான நேரப் பதிவுகளுக்கு நன்றி!), Webnews.lk, சம்பவங்களைப் பதிவுசெய்த, எங்களை டேக் செய்த மற்றும் #AttackonGGG ஹேஷ்டெக் மூலம் ட்விட்டரில் இந்தத் தகவலைக் கண்டறிவதில் பங்களித்த அனைவருக்கும் நன்றிகள். இந்த ஆக்கத்திற்காக சம்பவத்தை விரைவாக ஆவணப்படுத்துவது முக்கியமானதாக இருந்தது, மேலும் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளை அடையாளப்படுத்த பொது மக்களின் பங்களிப்பு பெரிதும் உதவியது.

சில வீடியோக்களை பதிவிறக்கம் செய்து இங்கே மீண்டும் பதிவேற்றியுள்ளோம். அவற்றுக்குச் சொந்தமானவர்களது உரிமையை திசைதிருப்புவதோ அல்லது இதை முற்றிலும் எங்கள் சொந்தப் படைப்பாக காண்பிப்பதோ இதன் நோக்கம் அல்ல, மாறாக ட்விட்டர், ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றில் இருந்து இந்தக் காட்சிகள் சேகரிக்கப்பட்டதால், குறித்த தளங்களுக்குள் நுழைந்து அவற்றைப் பார்க்க வேண்டும் என்ற சிரமத்தை எங்கள் வாசகர்களுக்கு வழங்காதிருப்பதே இதன் நோக்கம்.

நாங்கள் பயன்படுத்திய உள்ளடக்கத்தின் மூலங்களுக்குப் பெயரிட எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம் - சில காட்சிகளை முதலில் உருவாக்கியது யார் என்பதை எங்களால் சரிபார்க்க முடியாததால், அவற்றுக்கு பெயர் குறிப்பிடப்படவில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பல ஆதாரங்களில் உள்ள காட்சிகளைக் குறுக்கு சரிபார்ப்பு செய்துள்ளோம்; அவற்றில் தெளிவானவற்றை தெரிவு செய்து உங்களுக்கு வழங்கியுள்ளோம். எப்பொழுதும், நாங்கள் குறிப்பிட்டுள்ளவற்றை மாத்திரம் நோக்காது, வழங்கப்பட்ட ஆதாரங்களைச் சரிபார்த்து, காலவரிசை துல்லியமானதா என்பதைச் சரிபார்க்கவும்.

சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட மிகத் தெளிவான புகைப்படங்களைப் பார்ப்பதற்கு நாம் தினுக லியனவத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பரிந்துரைக்கிறோம்.

</aside>