July 7, 2022

Read this article in English | සිංහල| தமிழ்

signal-2022-06-09-113216_001.png

ஆய்வு : உமேஷ் மொரமுதலி செம்மையாக்கம் : ஆயிஷா நாஸிம் மொழிபெயர்ப்பு : செல்வராஜா கேசவன்

நீங்கள் கேட்டவை:


1. நேரலையிட்டமைக்காக உங்களை சிறைப்படுத்த முடியுமா**?**

கடந்த ஜூன் இருபதாந்திகதி, கோட்டாகோகமவுக்கு அருகில், செயற்பாட்டாளர்கள் சிலரை பொலிசார் கைது செய்து கொண்டிருந்த காட்சியைக் காணொளிப்பதிவு செய்த இளைஞர் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். சட்டவிரோதமாக ஒன்றுகூடியமைக்காகவும், கடமையை செய்ய விடாது தடுத்தமைக்காகவும் தன்னை சிறைப்படுத்துவதாக பொலிசார் கூறியதாக பண்டார கூறுகின்றார். நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

අනුරුද්ධ බණ්ඩාරව බලහත්කාරයෙන් පොලිස්... - Anuruddha Bandara | By Anuruddha Bandara | අනුරුද්ධ බණ්ඩාරව බලහත්කාරයෙන් පොලිස් අත්අඩංගුවට ගන්නා ආකාරය. -admin

பொலிசாருக்கு தமது கடமையை செய்ய விடாது தடுக்கும் தனிநபர்களை கைது செய்யும் அதிகாரத்தை சட்டம் வழங்கியுள்ளது. திறன்பேசிகளின் காலத்திற்கு முன்பே அறிமுகம் செய்யப்பட்டபடியால், சட்டத்தில் காணொளி பதிவுசெய்தலை பற்றியோ நேரலையிடலைப்பற்றியோ எதுவிதமான சிறப்பான குறிப்புகளும் இல்லை. கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவேண்டும் (சில விதிவிலக்குகள் உள்ளன). குறித்த நபர் பொலிசாரை கடமையைச் செய்யவிடாது தடுத்ததை அல்லது சட்டவிரோதமாக ஒன்றுகூடியதை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லாதுவிடின், அவர் விடுதலை செய்யப்படுவதுடன், அவருக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி செய்யப்படும்.

ஏதாவது ஆதாரங்களிருப்பின், நீதவான் மேலதிக விசாரணைக்கு அனுமதி வழங்கவோ, அல்லது நேரடியாக நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவோ முடியும். முன்வைக்கப்பட்ட ஆதாரத்தை பொறுத்து, பிணை வழங்குவதா இல்லையா என்பதையும் நீதவான் முடிவு செய்வார்.

ஒருவரது கைதுக்கான காரணத்தை அவரை கைது செய்யும் போது பொலிசார் தெரிவிப்பது கட்டாயமாகும்: இது தனிநபர் உரிமையினுள் உள்ளடங்கும். (அரசியலமைப்பின் பிரிவு 13). பொலிஸ் நிலையத்தில் இருக்கும் போது கூட வழக்கறிஞர் ஒருவரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் உரிமையை எந்தவொரு தனிநபருக்கும் சட்டம் வழங்கியுள்ளது. இதை கோருவதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு.

இங்கு குறிப்பிடப்படும் சட்ட ரீதியான சிக்கல்களிற்கான விளக்கங்களை தந்தவர் வழக்கறிஞர் எர்மிசா தேகல்


2. நாம் சீனாவிடம் எவ்வளவு கடன்பட்டுள்ளோம்**?**

இலங்கை சீனாவுக்குச் செலுத்த வேண்டிய கடன் தொடர்பில் அடிக்கடி தவறுதலாக அறிக்கையிடப்படுகிறது. இலங்கையின் மொத்த வெளிநாட்டுக்கடனில் 10% சீனாவுக்குச் செலுத்த வேண்டியது என சில அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இன்னொரு அறிக்கை சீனாவுக்கான கடன் 15% எனக்கூறுகிறது. ஆனால், எமது பகுப்பாய்வின்படி 2021 இன் இறுதியில் இலங்கையின் சீனாவுக்கான கடன் அரசின் ஒட்டுமொத்த வெளிநாட்டுக்கடனில் 20% ஆகக்காணப்படுகிறது.

<aside> 👉🏽 வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் தரவின்படி, 2021 இன் இறுதியில், அரசின் மொத்த வெளிநாட்டுக்கடன் 35.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும்போது, சீனாவிற்கான மொத்தக்கடன் 7.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

</aside>

இலங்கையின் கடன் நிலுவை பங்கு - 2021 இன் இறுதியில்

https://notion.vip/notion-chart/draw.html?option_colors=%230B6E99%2C%230F7B6C%2C%23E03E3E%2C%23D9730D%2C%2364473A%2C%23DFAB01%2C%237D7C78&config_documentId=1rrnaI-_a-ldZIqGa9Aiyjy3msLYfKj8cfhyeg-_TNcE&config_sheetName=Sheet2&config_dataRange=A2%3AB9&config_chartType=pie&config_theme=lightMode&option_legend_position=bottom